×
Saravana Stores

விபசார புரோக்கர்கள் இருவர் கைது

 

திருப்பூர்,ஜூன்23:திருப்பூர் மங்கலம் ரோடு கே.வி.ஆர்.நகர், கொடிக்கம்பம் பகுதியில் சிலர் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பல்வேறு வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது அப்பகுதியில் ஒரு வீட்டில் 4 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது விசாரணை தெரியவந்தது. மேலும் விபசார தொழில் பெண்களை ஈடுபடுத்திய கோவை மாவட்டம் துடியலூர் பகுதி சேர்ந்த சரவணன்(43). திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி சேர்ந்த கஜேந்திரன் (42) ஆகியோரை மத்திய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post விபசார புரோக்கர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Central Police ,KVR Nagar, Kodikampam ,Mangalam Road, ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது