×

சட்டீஸ்கரில் நக்சல் தலைவன் கொலை: கூட்டாளிகளால் தீர்த்துக்கட்டப்பட்டார்

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் நக்சல் அமைப்பின் தலைவன், அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கான்கேர் மாவட்டம், கோயலிபேட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட கேஷ்கோதி கிராமம் அருகே நக்சல் உடை அணிந்த ஒருவரின் சடலம் கிடப்பது நேற்று கண்டறியப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் அருகில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தை சேர்ந்த மனு துக்கா என்பது தெரியவந்தது. அவர், கிஷ்கோடா கிராமத்தில் இயங்கும் நக்சல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர். அவரது சடலம் அருகே கிடந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில், வடக்கு பஸ்தார் கோட்ட நக்சல் அமைப்பு அவரை எச்சரித்து எழுதியிருந்தது. அதாவது, பெண்களுக்கு எதிரான போக்கை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அண்மையில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிக்க முயன்றதால் கொல்லப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது. நக்சல் பிரிவில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக மனு துக்கா இருந்தார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.8 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், அவர் தனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கான்கேர் மாவட்ட போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் கோமன் லால் சின்ஹா கூறினார்.

The post சட்டீஸ்கரில் நக்சல் தலைவன் கொலை: கூட்டாளிகளால் தீர்த்துக்கட்டப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Naksal ,Sattiesgarh ,Raipur ,Naxal ,Kanker district, Chattisgarh ,Kankare District ,Chattiesgarh ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி