×

பாடாலூர் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி

 

பாடாலூர், ஜூன்.22: ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் 55 கிலோ எடை கொண்ட நபர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே காரை கிராமத்தில் 55 கிலோ கிடை கொண்ட நபர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 36 அணிகள் 4 சுற்றுகளாக பங்கு பெற்றன.

இதில் மயிலாடுதுறை சேர்ந்த கபடி வீரர்கள் முதல் இடத்தையும், லால்குடி அன்பில் சேர்ந்த கபடி வீரர்கள் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் ரோவர் கல்லூரி சேர்ந்த கபடி வீரர்கள் மூன்றாவது இடத்தையும், காரை சேர்ந்த 7 ஸ்டார் கபடி வீரர்கள் நான்காவது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் இன்று வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காரை 7 ஸ்டார் பாய்ஸ் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post பாடாலூர் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : kabaddi ,Padalur ,Badalur ,Karai ,Aladhur taluk ,Dinakaran ,
× RELATED மாநில பெண்கள் கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்