×

கோவில்பட்டி பகுதியில் இருவழி அகல ரயில் பாதைக்கு நிலம் எடுப்பு பணி கலெக்டர் நேரில் ஆய்வு

கோவில்பட்டி, ஜூன் 22: கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி நகரம், இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி மற்றும் மந்தித்தோப்பு ஆகிய பகுதிகளில் மதுரை-தூத்துக்குடி ரயில்வே இருவழி அகலப்பாதை அமைக்கும் வகைக்கு நில எடுப்பு செய்தல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தனி மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ) மாரிமுத்து, கோவில்பட்டி தாசில்தார் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கோவில்பட்டி பகுதியில் இருவழி அகல ரயில் பாதைக்கு நிலம் எடுப்பு பணி கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Madurai ,Tuticorin ,Inammaniyachi ,Alampatti ,Manthitoppu ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...