×

கஞ்சா கடத்திய இருவர் கைது

பட்டிவீரன்பட்டி, ஜூன் 21: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன்(34), மணிகண்டன்(37) என்பதும், நெல்லூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, தலைமறைவாக உள்ள முத்துப்பாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கஞ்சா கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pathiveeranbatti ,Pativeeranbatti police ,Chitare ,Pativeeranbatti, Dintugul district ,Dinakaran ,
× RELATED ‘குருப் 1ல் பாஸ்…. டிஎஸ்பி ஆகிட்டேன்’...