×

மதுரையில் மதிமுக கையெழுத்து இயக்கம்

 

மதுரை, ஜூன் 21: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி குடியரசு தலைவரை வலியுறுத்தி ஜூன் 20ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் முனிச்சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக கோரி மதிமுக சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. எம்எல்ஏ பூமிநாதன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில தொழிற்சங்க இணை பொது செயலாளர் மகபூப்ஜான், அவை தலைவர் சுப்பையா, பொருளாளர் சுருதி ரமேஷ், துணை செயலாளர்கள் பாஸ்கரசேதுபதி, பரமேஸ்வரன், தணிக்கைக்குழு உறுப்பினர் பாண்டியன், வக்கீல் ஆசைத்தம்பி, செயற்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், மகாலிங்கம், கருணாநிதி, கவுன்சிலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மதுரையில் மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Mathimaghaka Signature Movement ,Madurai ,Governor of Tamil Nadu ,R.R. N.N. ,President of the Republic ,Ravi ,Madurai Mathimakam Signature Movement ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!