×

மாற்றுத்திறனாளிகள் மாணவர் சேர்க்கை

 

மதுரை, ஜூன் 21: மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு அரசு நடுநிலைப்பள்ளி வில்லாபுரம் ஹவுசிங் யூனிட்டில் இயங்கி வருகிறது. இங்கு நடப்பு கல்வியாண்டிற்கான (2023-24) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளி கட்டணமில்லா விடுதியுடன் கூடிய உண்டு உறைவிடப்பள்ளி ஆகும்.

1 முதல் 8ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டத்தில் நடத்தப்படும். யுடிஐடி அட்டை, தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல், கைத்தடி பெற்று வழங்கப்படும். பெண் கல்விக்கு ஊக்கத்தொகை, பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித் தொகை, இயன்முறை தசைப்பயிற்சி (பிசியோதெரபி), கணினி வழி கற்பித்தல், கல்வியுடன் கூடிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகை வசதிகள் உள்ளது. இதுதொடர்பாக பள்ளியில் 9543025483, 8778755063 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District Handicapped Welfare Department ,Dinakaran ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை