×

திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் கிணறு சுத்தம் செய்யும் பணி: பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியை பேரூராட்சி தலைவர் யுவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வல்லிபுரம் பாலாற்றிலிருந்து நீரேற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த வினியோகத்திற்கென்று விளாகம், நாவலூர் போன்ற பகுதிகளில் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கிருந்து, பேரூராட்சிக்குட்பட்ட தேசுமுகிப்பேட்டை, கானகோயில் பேட்டை, ருத்திரான் கோயில், பரமசிவன் நகர், காக்கை குன்று, மேட்டு மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் சேமிக்கப்படுகின்ற விளாகம் பகுதியில் உள்ள கிணற்றை நேற்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் பேரூராட்சி ஊழியர்களுடன் சென்று கிணற்றிலேயே இறங்கி, கிணற்றை சுத்தப்படுத்தப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து, அவர் கூறுகையில், ‘பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிநீர் கிணறுகள் சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்படும்’ என்றார்.

The post திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் கிணறு சுத்தம் செய்யும் பணி: பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirukkulam ,President of the Provinity ,Yuvraj ,President ,Tirukkupuram ,Dinakaran ,
× RELATED ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது