×

உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வட்டாட்சியர் லோகநாதன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் காது, மூக்கு தொண்டை மனநல மருத்துவம் என மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உபகரணங்களை கொண்டு பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அப்போது, மாற்றுத்திறனாளிகள் 18 வயதுக்குட்பட்ட மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் 18 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, கடன் உதவி மற்றும் தையல் இயந்திரம், திருமண உதவித்தொகை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா அனைத்து செயல்களுடன் கூடிய நவீன உபகரணங்கள், இலவச பயண அட்டை பார்வையற்றோர் அல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை படிப்பு தொடர்பான உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்டன.

இதனைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த மருத்துவ முகாமில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Uttarmerur ,Uttara Merur ,Uttara ,Merur District Development Office ,Uttaramerur ,Dinakaran ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்