×

மும்பை தாக்குதல் தீவிரவாதி சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை: இந்தியா, அமெரிக்கா முயற்சிக்கு ஜநா சபையில் முட்டுக்கட்டை

ஐநா: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இதொய்பா பயங்கரவாதி மற்றும் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட சஜித் மிரை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை சீனா ஐ.நா.வில் தடுக்கிறது மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாகத் தேடப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்விதிப்படி சஜித் மிர்ரை கருப்புப் பட்டியலில் சேர்த்து, அவனது சொத்துகளை முடக்கி, பயணத்திற்கு தடை , ஆயுத விற்பனைக்கு தடை விதிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான மிர், அமெரிக்காவிலும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளான். அவனது தலைக்கு ரூ.41 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் மிர் கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனை ஐநாவின் கருப்பு பட்டியலில் சேர்க்க இப்போது சீனா தடை விதித்து உள்ளது.

 

The post மும்பை தாக்குதல் தீவிரவாதி சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை: இந்தியா, அமெரிக்கா முயற்சிக்கு ஜநா சபையில் முட்டுக்கட்டை appeared first on Dinakaran.

Tags : China ,Mumbai ,Sajid Mirri ,India ,United States ,Jana council ,UN ,Pakistan ,Lashkar Itoiba ,Sajid ,Sajid Mir ,USA ,Dinakaran ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...