×

தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது!: உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்..!!

டெல்லி: அமலாக்கத்துறை மேல்முறையீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மனு விசாரணைக்கு வரும்போது தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டுமென கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏற்கனவே 2 மேல்முறையீடு மனுக்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அந்த 2 மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவுக்கு எதிர்மனுதாரரின் கருத்துக்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 15ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்தரப்பை கேட்காமலேயே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிய அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தரப்பு கருத்தை கேட்ட பிறகே, அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு மீதான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவிக்கு வழங்கப்பட்டு அவரது சார்பிலும் நாளை வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது.

The post தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது!: உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Supreme Court ,Delhi ,Caviet ,Sentilbalaji ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு