×

திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் மீனாட்சி அம்மன்..!!

மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை கேட்டு வணங்கினாலும் அதை அருளுவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க கூடியவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர். மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த கோவிலுக்கு வந்துமீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும். சுவாமி பிரகாரத்தில் ஓம் என்னும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருக்கும். மன அமைதி, நிம்மதி வேண்டுவோர்கள் கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது. சுவாமிக்குபால், எண்ணெய், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்யலாம்.

தவம் செய்தல், விரதம் இருத்தல், தியானத்தில் ஈடுபடுதல், வேள்வி புரிதல்,தானதர்மங்கள் அளித்தல் போன்ற பல்வேறு நிலையில் சுவாமிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அம்பாளை பொருத்தவரை பட்டு புடவை சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் வேண்டுதல்களைபக்தர்கள் பூர்த்தி செய்கின்றனர். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்தும் யாகம் செய்தும் வழிபடலாம். கோவிலுக்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

The post திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் மீனாட்சி அம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman ,Meenatchi Amman ,Iswaryas ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி...