×

ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்: நாளை விழா தொடங்குகிறது

 

அருப்புக்கோட்டை, ஜூன் 20: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இது மாறவர்ம சுந்தரபாண்டியனால் கி.பி.1216ல் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் ஆகும். கோயில் குருசாப விமோசனம் பெற்ற தலம் ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு நாளை ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்த கோயிலில் பெரியதேர், சிறிய தேர் இரண்டு உள்ளது. பெரிய தேரில் சொக்கநாதரும், பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சியும் திருவீதிகளில் எழுந்தருள்வர். பெரிய தேர் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. தேரை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது.

பெரியதேரில் அலங்கார கால்கள், பிளாட்பாரம், கீழ்தட்டு முதல் கலசம் வரை தேக்குமரத்தால் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த மரசிற்ப ஸ்தபதி ரவி தலைமையில் தேரை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனி பிரம்மோற்சவ விழா பணிகளை கோவில் செயல் அலுவலர் தேவி, பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

The post ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்: நாளை விழா தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Ani ,Aruppukkottai ,Aruppukkottai Chokkalingapuram ,Meenakshi Chokkanath ,Temple ,Maravarma Sundharapandiyan ,
× RELATED அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில்...