×

அன்றும் ராகுல் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு மதியஉணவு வழங்கல்

கரூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் வெள்ளியணையில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் பயலுகின்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளியணை பஸ் நிலையம் அருகில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. செல்லாண்டிபட்டி ஆரம்பப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாணவர் காங்கிரஸின் மாநில செயலாளர் சசிகுமார் சார்பாக நோட்டு. பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட் டன. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் சின்னையன், நாகேஸ்வரன், முன்னாள் நகர தலைவர் சுப்பன், சனப்பிரட்டி காங்., நிர்வாகிகள் முத்துசாமி, பரமசிவம், செல்வராஜ், வெள்ளியணை பத்மநாபன் மற்றும் பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் விசுவை செந்தில், வெள்ளியணை லோகநாதன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post அன்றும் ராகுல் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு மதியஉணவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Karur ,president ,Congress party ,Karur district Congress party ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...