×

கடலூர் அருகே கோர விபத்து ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல்

புதுச்சேரி, ஜூன் 20: கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்த திமுக இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், கடலூர் அருகே 2 பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் 80 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். ஜிப்மர் இயக்குநர் மற்றும் மருத்துவர்களை சந்தித்து படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளோம். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார், என்றார்.

The post கடலூர் அருகே கோர விபத்து ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Ministers ,Cuddalore ,Jipmar ,Puducherry ,Kora ,Cuddalore district ,Melpatambakkam ,Kora accident ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு