![]()
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரியை இப்போதுள்ள 8 சதவீதத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவீதமும், அதற்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது. அதேபோன்று, கார்களுக்கான சாலைவரியும் உயர்கிறது. இதனால் வாகனங்களின் விலை 5 சதவீத அளவுக்கு உயரலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். வாகன வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. எனவே, சாலை வரியை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
The post வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
