×

ஹோண்டா யூனிகான்

ஹோண்டா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹோண்டா யூனிகான் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்ஜின் புதிய வாகன விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள 162 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 7,200 ஆர்பிஎம்-ல் 12.9 எச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

5 ஸ்பீடு கியர் பாக்ஸ்கொண்டது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,09,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட சுமார் ரூ.4,082 அதிகம். 3 வருட வாரண்டியுடன் வருகிறது. விருப்பப்பட்டால், வாரண்டியை மேலும் 7 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ள முடியும்.

The post ஹோண்டா யூனிகான் appeared first on Dinakaran.

Tags : Honda ,
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...