×

வாய் பேச முடியாத இளம்பெண் பலாத்காரம்: ஊர்க்காவல் படை வீரர் கைது

தர்மபுரி: வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்த ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அஸ்தகிரியூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் 23 வயது மனைவி வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம், இந்த பெண் வழக்கம்போல் ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு எர்ரங்காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ஊர்க்காவல் படையில் பணியாற்றும் சென்றாயன்(37) என்பவர், அவரை வழிமறித்துள்ளார். பின்னர், அவரை அருகில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்த அப்பெண், தனது கணவர் மற்றும் தாயார் ஆகியோரிடம் சைகையில் விபரத்தை கூறி அழுதுள்ளார்.

உடனே அவர்கள் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, சென்றாயன் மற்றும் அவரது பெரியப்பா மகன் சென்னப்பன்(39) ஆகியோர் சேர்ந்து, அவர்களை கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். இதில், அப்பெண்ணின் தாயாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஊர்காவல் படை வீரர் சென்றாயனை கைது செய்தனர். மேலும், சென்னப்பனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாய் பேச முடியாத இளம்பெண் பலாத்காரம்: ஊர்க்காவல் படை வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Peeler ,Darmapuri ,Darmapuri District ,Kadhthur Kaval ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...