×

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்தியா, மங்கோலியா, வனுவாட்டு, லெபனான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா முதல் இரு லீக் ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் போட்டி டிராவில் முடிந்தது. நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா- லெபனான் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

2வது பாதியில் 46வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 55வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்தார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிபா தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள லெபனானை 101வது இடத்தில் உள்ள இந்தியா வீழ்த்தியதால் தரவரிசையில் 100க்குள் நுழைந்துள்ளது. இதனிடையே வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

The post இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Intercontinental Cup Football ,Odisha ,Chief Minister ,Bhubaneswar ,Bhubaneswar, Odisha ,India ,Mongolia ,Vanuatu ,Lebanon ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு