×

தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர்!: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்களின் சேவையில் மாற்றம்..!!

சென்னை: சென்னையில் மழையால் வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் மூழ்கியுள்ள தண்டவாளங்கள் வழியாக செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,

வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையேயான பாலம் எண் 14ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.

சென்ட்ரலில் புறப்பட வேண்டிய மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.

சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் ஆவடியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும்..

கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறப்படும்.

கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயில் ஆவடியில் இருந்து மாலை 4 மணிக்கு புபுறப்படும்.

சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவடியில் இருந்து கோவை இண்டர்சிட்டி, லால்பாக் விரைவு ரயில்கள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ள நீர் வடிந்த பிறகே சென்ட்ரலில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர்!: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்களின் சேவையில் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Chennai ,Vyasarbadi ,Basinbridge ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!