×

ஜல்லிக்கட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் உதயநிதி உள்பட 8 அமைச்சர்கள் பங்கேற்பு: புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்கிறது

புதுகை: ஜல்லிக்கட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்றுதந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம், புதுகையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 8 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம், புதுகையில் தஞ்சை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து புதுகைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் இன்று மாலை வருகிறார்.இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் புதுகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர். விழா நடைபெறும் திடலில் விழாக்குழு சார்பில், விளம்பர பலகை, பேனர்களை திமுகவினர் வைக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் உதயநிதி உள்பட 8 அமைச்சர்கள் பங்கேற்பு: புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Udhayanidhi ,Pudukkotta ,Jallikkat ,Chief President of ,Jallikat ,G.K. ,Thanksgiving Announcement ,Stalin ,New House ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்