×

கோயில்களில் அமாவாசை வழிபாடு

ராமநாதபுரம், ஜூன் 18: ராமநாதபுரம் மாவட்ட அம்மன் கோயில்களில் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உத்தரகோசமங்கை வாராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் பிரசாதம் சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. கடலாடி பாதாள காளியம்மனுக்கு பால், மஞ்சள், குங்கும் உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதுபோன்று ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி அருகே சமத்துவபுரம் வனபேச்சியம்மன், ராக்கச்சி அம்மன், பூங்குளம் சேதுமாகாளியம்மன், காணீக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோயில்களில் உச்சிகால பூஜையும், பலி பீட பூஜையும் நேற்று நடந்தது.

அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிற வள்ளி அம்மன் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கோயில்களில் அமாவாசை வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,District Goddess Temples ,Ani ,Uttarakhosamangai ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’