×

கடவூர் அருகே பூசாரிப்பட்டியில் திருவிழாவில் பிரச்னைகள் வந்தால் அரசின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்

தோகைமலை, ஜூன் 18: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சி பூசாரிபட்டியில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், பாம்பலம்மன், முனியப்பன் கோயில்கள் தனித்தனியாக உள்ளது. இந்த கோயில்களுக்கு திருவிழா நடத்துவது சம்மந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இதனால் இருதரப்பினரும் தனித்தினயே திருவிழா நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 9,10,11 ஆகிய தேதிகளில் ஒரு தரப்பினர் மேற்படி விநாயகர், பாம்பலம்மன், முனியப்பன் ஆகிய கோயில்களுக்கு திருவிழா நடத்தப்பட்டது.
இதனை அடுத்து மற்றொரு தரப்பினர் வருகின்ற 23.6.2023 முதல் 25.6.2023 ஆகிய 3 நாட்கள் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதனால் தற்போது திருவிழா நடத்தும் தரப்பினர் ஏற்கனவே திருவிழா நடத்திய தரப்பிடம் கோயில் சாவியை கேட்டு உள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் இருந்ததாக தெரிகிறது. பின்னர் தற்போது திருவிழா நடத்தும் தரப்பினர் கடவூர் தாசில்தாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து செம்பியநத்தம் ஊராட்சி பூசாரிபட்டியில் நடைபெறும் திருவிழாவில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் வரக்கூடாறு என்று, கடவூர் தாசில்தார் சார்பில் இருதரப்பையும் சேர்ந்தவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு, கடவூர் தாசில்தார் முனிராஜ் தலைமை வகித்தார். துணை தாசில்தார் இளம்பருதி, பாலவிடுதி எஸ்எஸ்ஐ தமிழ்மணி, பாலவிடுதி ஆர்ஐ சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏற்கனவே ஒரு தரப்பினர் திருவிழா நடத்திய நிலையில் மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். ஆகவே திருவிழா நடத்துவதற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் திருவிழா நடத்துவது என்றும், இந்த திருவிழாவில் எந்தவிதமான பிரச்னைகளும் வராமல் விழாக்குழு நிர்வாகிகள் கண்காணித்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரச்னைகள் வந்தால் அரசு எடுக்கும் சட்டபடியான முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மைலம்பட்டி ஆர்ஐ நெப்பிபோலியன், ஆதனூர் விஏஓ ராஜேஸ் உள்பட பூசாரிபட்டியை சேர்ந்த இருதரப்பு முக்கியதர்களும் கலந்து கொண்டனர்.

The post கடவூர் அருகே பூசாரிப்பட்டியில் திருவிழாவில் பிரச்னைகள் வந்தால் அரசின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் appeared first on Dinakaran.

Tags : Pusaripatti ,Kadavur ,Thokaimalai ,Karur district ,Dharagampatti ,Sembiyanantham ,Panchayat Pusaripatti ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்