×

திருமலையில் தூய்மை பணி

திருச்செங்கோடு, ஜூன் 18: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகள் நேற்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றினர். கல்லூரியின் மேலாண்மை இயக்குனர்கள் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி தலைமை வகித்தனர். இச்சேவை பணிக்கு கோயிலின் உதவி ஆணையர் ரமணிகாந்தன் முன்னிலை வகித்தார். சாரண இயக்க மாவட்ட செயலர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மலைக்கோயிலுக்கு செல்லும் படிப்பாதை மற்றும் கோயிலை சுற்றிலும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றினர். இதில் கல்லூரியின் திரிசாரணர், திரிசாரணீயர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 120 பேர் மேற்கொண்டனர். இவர்களது பணியினை நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் சாரண இயக்க முதன்மை ஆணையர் மகேஸ்வரி, கோயில் அறங்காவலர் பிரபாகர், அருணா. சங்கர் ஆகியோர் பாராட்டினர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கற்பக ராஜன், திரிசாரண ஆசிரியர் மணியரசன் செய்திருந்தனர்.

சர்வமலை கரடு பகுதியில் ஊடுருவினால் நடவடிக்கைமோகனூர், ஜூன் 18: மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணியாபுரம், ராசாம்பாளையம், தொட்டிபட்டி ஆகிய பகுதியை உள்ளடக்கிய சுமார் 582 ஹெக்டேரில் சர்வமலை கரடு உள்ளது. இந்த கரடு உச்சியில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரடு பகுதியில் சமூக விரோதிகள் ஊடுருவி, மது அருந்தி விட்டு பாட்டில் மற்றும் நெகிழிப் பொருட்களை போட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், கரடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் வனச்சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், ‘வனத்துறைக்கு சொந்தமான சர்வமலை கரடு உச்சியில் உள்ள கோயிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் கரடு பகுதியில் சமூக விரோதிகள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

The post திருமலையில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tiruchengode ,World Environment Day ,Tiruchengode Vidya Vikas College of Engineering and Technology ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ