×

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் 546 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி

மிர்பூர்: ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 546 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கான் பந்துவீச… வங்க தேசம் முதல் இன்னிங்சில் 382 ரன் குவித்தது (86 ஓவர்). ஷான்டோ 146, ஹாசன் ஜாய் 76, மெகிதி ஹசன் 48, , முஷ்பிகுர் ரகீம் 47 ரன் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் நிஜத் மசூத் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆப்கான் முதல் இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது (39 ஓவர்). 236 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 425 ரன் குவித்து டிக்ளேர் செய்தது ( 80 ஓவர்). ஷான்டோ 124, மோமினுல் 121, ஜாகிர் 71, கேப்டன் லிட்டன் தாஸ் 66* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து 663 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்டு 70 ரன் மட்டுமே சேர்த்து, உணவு இடைவேளைக்கு முன்பாகவே 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (33 ஓவர்). அதிகபட்சமாக ரஹமத் ஷா 30 ரன், கரிம் ஜனத் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். வங்கதேச தரப்பில் தஸ்கின் 4, ஷோரிபுல் 3, மிராஸ், எபாதத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் 546 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய நஜ்மல் ஷான்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேச டெஸ்ட் வரலாற்றில் கிடைத்த 3வது பெரிய வெற்றி இது. 20வது நூற்றாண்டில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியும் இதுதான். அடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள், 2 டி20ல் மோத உள்ளன.

The post ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் 546 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Afghanistan ,Mirpur ,Mirpur National ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல்...