×

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை

சென்னை: சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தி படம், மிமி. லக்‌ஷ்மன் உடேகர் இயக்கத்தில் கீர்த்தி சனோன், பங்கஜ் திரிபாதி உள்பட பலர் நடித்த இப்படம் ஓடிடியில் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, ‘பரம் சுந்தரி’ என்ற பாடலை  யூடியூப்பில் 21 கோடிக்கு மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் கிராமி விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டரில், ‘மிமி திரைப்படத்தில் இடம்பெற்ற என் பாடல்கள், 64வது கிராமி விருதுக்கான பரிந்துரைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ல் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகள், 2 கிராமி விருதுகள் ரஹ்மான் வென்றார்….

The post ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. Rahman ,Award ,Chennai ,rahman ,Keerthi Chanon ,Pankaj Tribati ,Lakshman Udekar Movement ,A. R.R. Rahman ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...