×

மதுரையில் கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயிலில் அசைவத் திருவிழா: 6,000 ஆண்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொள்ளும் விழா

மதுரை: திருமங்கலம் அருகே 100 ஆடுகள், 5,000 கிலோ அரிசி, நள்ளிரவில் சமையல் என 6,000 ஆண்கள் பங்கேற்ற அசைவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொரிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அசைவ திருவிழா இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான அசைவ திருவிழாவிற்கு தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதற்கென நூறு ஆடுகள், 5,000 கிலோ அரிசி போன்றவை பக்தர்களிடமிருந்து நேர்த்தி கடனாக பெறப்பட்டு சமையல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நள்ளிரவில் நடைபெற்ற சமையலுக்கு பிறகு கரும்பாறை முத்தையாவுக்கு படையலிட்ட பிறகு அதிகாலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 6,000 ஆண்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டு சுவைத்தனர். இந்த விருந்தில் சாதி, மத பேதமில்லாமல் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயிலில் அசைவத் திருவிழா: 6,000 ஆண்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொள்ளும் விழா appeared first on Dinakaran.

Tags : Karambara Muthaya Sami Tirkhoil ,Madurai ,Thirumangalam ,Madurai Kambari Muthaya Sami Tirukoil Moving Festival ,Thirukhoil ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி