×

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

 

ஈரோடு,ஜூன்17: காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக நேற்று அணைகட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி தண்ணீர் நிறுத்தப்படுவது வாடிக்கையாகும்.இந்தாண்டு அட்டவணைப்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டு வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்தாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து நேற்று காலை பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர்.

முதல்கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அக்டோபர் 13ம் தேதி வரை 120 நாட்களுக்கு திறக்கப்படும் என்றும் இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக மணி மண்டபத்தில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kalingarayan ,Erode ,Bhavanisagar ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...