சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பாஜ அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனை தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப் பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பாஜ- சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.
The post மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.