×

கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

 

காரைக்குடி, ஜூன் 16: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்கள் தேர்வு நடத்தப்பட உள்ளது. நாளை காலை 9 மணிக்கு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 18ம் தேதி காலை 7 மணிக்கு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.

14 வயதுக்கு உட்பட்டவர்களின் வயது வரம்பு 1.9.2009 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான வயது வரம்பு 1.9,2007 அன்றே, அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை, ஷூ மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் தாங்களே கொண்டு வரவேண்டும். ஆதார் நகல் கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை 94439 78488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Tamil Nadu Cricket Association ,Alagappa University Physical Education Ground ,Dinakaran ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்