×

மலைகிராமத்துக்கு சாலை வசதியின்றி இறந்த பெண் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு

போளூர், ஜூன் 16: ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு மலை கிராமத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் நேற்று இறந்த ெபண் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி சாலை வசதி செய்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை தாலுகா கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமம் படவேடு அடுத்த ேகாட்டைமேடு மலையடிவாரத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. படவேடு 13 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த கிராம மக்கள் எந்த பொருள் வேண்டுமானாலும் படவேட்டிற்கு வந்து தான் வாங்கி செல்ல வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு ெசல்ல வேண்டுமென்றால் இங்கு வந்து தான் வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இந்த கிராமத்தை ேசர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், அவரது மனைவி சாந்தி(29). இதில் சாந்திக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து படவேடு கோட்டைமலை அடிவாரத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

பின்னர் தனது மனைவியின் உடலை டோலியில் கட்டி தூக்கி செல்ல வேண்டும் என்பதால் பாதை அமைத்து கொடுத்தால் தான் எடுத்து செல்வேன் என கூறிய முருகன் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ‘சாலை போடுவதற்கு அளவீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சாலை போட முடியாது. விரைவில சாலை போடப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு சடலத்தை டோலியில் கட்டி தூக்கி சென்றனர். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கானமலை ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ரங்கசாமி பெரிய ஊராட்சியான கானமலை ஊராட்சி வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. மக்களின் பிரச்னைக்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

The post மலைகிராமத்துக்கு சாலை வசதியின்றி இறந்த பெண் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு appeared first on Dinakaran.

Tags : Javwadumalai ,Polur ,Jawvadumalai Elanthampattu ,
× RELATED செம்மரம் கடத்திய தந்தை, மகன் கைது: 3 டன் செம்மரம் பறிமுதல்