×

மாருதி ஜிம்னி

மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற 5 கதவுகள் கொண்ட எஸ்யுவியை டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது. இதற்கான முன்பதிவுகள் அப்போதே துவங்கியிருந்தது. துவக்கத்தில் முன்பதிவு தொகை ரூ.11,000 என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த காரை மாருதி சுசூகி சந்தைப்படுத்தியுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.12.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரில் சர்க்குலர் ஹெட்லாம்ப், பனி விளக்குகள், 9 அங்குல தொடுதிரையுடன் ஸ்மார்ட் பிளே புரோ பிளஸ் உடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் உள்ளன. இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட கே15பி பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் உள்ளன. ஜெட்டா மற்றும் ஆல்பா என இரண்டு வேரியண்ட்களில் மொத்தம் 6 மாடல்கள் உள்ளன.

துவக்க மாடலான ஜெட்டா மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷோரூம் விலையாக ரூ.12.74 லட்சம், ஆட்டோமேட்டிக் ரூ.13.94 லட்சம் எனவும், ஆல்பா மேனுவல் ரூ.13.69 லட்சம், மேனுவல் டூயல் டோன் ரூ.13.85 லட்சம், ஆட்டோமேட்டிக் ரூ.14.89 லட்சம், ஆட்டோமேட்டிக் டூயல் டோன் ரூ.15.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சந்தைக்கு வர உள்ள மாடல்களான 5 கதவுகள் கொண்ட மகிந்திரா தார், போர்ஸ் குர்கா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

The post மாருதி ஜிம்னி appeared first on Dinakaran.

Tags : Maruti Jimny ,Maruti ,Jimney ,Delhi ,Maruti Jimney ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’