×

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் என தகவல்

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் கரூரில் உள்ள மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் ஜூன் 13 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

மேலும் செந்தில் பாலாஜியை 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமலாகத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் 4-வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது துறைகள் மற்ற அமைச்சர்களிடம் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதகாக தகவல் தெரிவித்துள்ளனர்.முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அதிகாரப்பூர்வ இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்நேரமும் வெளியாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Karur ,Minister ,Ilaga ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...