×

சரித்திரம் படைத்த நவீன நந்தினி!

12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முடிவு வெளியான நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு திண்டுக்கல் மாணவி நந்தினி சரித்திர சாதனை படைத்து ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளார்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி. அண்ணாமலையார் மில்ஸ் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி இந்த சாதனையைப் படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் மாநிலத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மாணவி நந்தினி எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வருகிறார்.மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, பிற ஆசிரியர்கள் மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்தனர் என்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைவரும் ஊக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் எந்த மாணவ -மாணவியரும் ஆறு பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றதில்லை என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத் தக்கது.

– ஷா

The post சரித்திரம் படைத்த நவீன நந்தினி! appeared first on Dinakaran.

Tags : Nandini Satra ,Nandini ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு