×

திருப்பத்தூர் நகரில் சாலை விதிகளை மீறிய 12 ஆட்டோக்கள் பறிமுதல்

*வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகரில் சாைல விதிகளை மீறிய 12 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மாணவர்கள் ஒன்றரை மாதத்திற்கு பிறகு உற்சகாத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில், சாலை விதிகளை மீறி பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இதில், திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், சமையல் எரிவாயுவை பயன்படுத்தி விதிமுறைக்கு மாறாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் ஓட்டிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பின்னர், அந்த ஆட்டோக்கள் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதேபோல், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து, இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்றும், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்கினால் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருப்பத்தூர் நகரில் சாலை விதிகளை மீறிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupattur Nagar ,Departments ,Thirupattur ,Tirupattur ,
× RELATED டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா...