×

இஸ்ரோவில் 303 இன்ஜினியர், சயின்டிஸ்ட் இடங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினியர் பணியிடங்களுக்கு பி.இ.,/பி.டெக்., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Scientist/Engineer ‘SC’ (Electronics): 92 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் 65% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்.,
2. Scientist/Engineer ‘SC’ (Mechanical): 163 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 65% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்.,
3. Scientist/Engineer ‘SC’ (Computer Science): 48 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 14.06.2023 தேதியின்படி 28க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதியின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 14.06.2023.

The post இஸ்ரோவில் 303 இன்ஜினியர், சயின்டிஸ்ட் இடங்கள் appeared first on Dinakaran.

Tags : ISRO ,B.E. ,B.Tech. ,Indian Space Research Centre ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...