×

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு: இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் நாட திமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவு அமலாக்கதுறை கைது செய்துள்ளது. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை வழங்கவில்லை என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி கைது தொடர்பான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளிடம் திமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று காலை 7 மணி முதல் தங்களது கஸ்டடியில் அமலாக்கத்துறையினர் வைத்திருந்தார்கள்.

நேற்று அவரை சந்திக்க வழக்கறிஞரை கூட அனுமதிக்கவில்லை என்று ஐகோர்ட்டில் திமுக தரப்பு வாதம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி கைது எதிர்த்து திமுக செய்துள்ள முறையீடு மீது இன்று பிற்பகலில் ஐகோர்ட் விசாரணை நடக்கவுள்ளது. செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து திமுக செய்துள்ள முறையீடு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை நடக்கவுள்ளது. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், செந்தில் பாலாஜியிடம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு: இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Djagara ,Ikort ,Djagar ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...