சென்னை :செந்தில் பாலாஜியின் நள்ளிரவு நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது,” “அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை; அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை;
நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?; உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துசென்ற மறுநாளில் இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதை விட அவர் மாநில அரசின் பொறுப்பில் உள்ளவர்.
உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பாலியல் புகார் அளித்தும் பாஜக எம்.பி.யை விசாரிக்கக் கூட மறுக்கிறார்கள். மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாய் திறக்கவில்லை. மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.முதலமைச்சர் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மனித உரிமை மீறல் மட்டும் அல்ல. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம்.மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்,”என்றார்.
The post செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மனித உரிமை மீறல் மட்டும் அல்ல. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம் : கே.எஸ்.அழகிரி!! appeared first on Dinakaran.