×

ஈரோடு, சிவகிரி பகுதியில் இன்று மின் தடை

 

ஈரோடு, ஜூன் 14: ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (14ம் தேதி) நடைபெற உள்ளது.
இதனால், இதனால் மணல்மேடு, ஈ.வி.என். சாலை, கரிமேடு, ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஈரோடு மாவட்டம், சிவகிரி துணை மின் நிலையத்தில் உள்ள மின்னப்பாளையம் மின்பாதையில் இன்று (14ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அண்ணாமலை கோட்டை, மின்னப்பாளையம், பழமங்கலம், கோவில்பாளையம், பாப்பாவலசு, குமாரவலசு, பூச்சக்காடு, ஆயப்பரப்பு, பழனிமலை குன்று ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு, சிவகிரி பகுதியில் இன்று மின் தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,Sivagiri ,Chennimalai Road ,Erode Kasipalayam ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் மே தின பேரணி