×

குளித்தலை அருகே மேலசுக்காம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்கத்தொட்டி

*புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சிக்குட்பட்ட உள்ளது மேல சுக்காம்பட்டி. இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குடிநீர் தேவைக்காக கடந்த 25 வருடங்களுக்கு முன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

அதன் பிறகு கடந்த 2013-14ம் ஆண்டு மறுசீரமைப்பு பணி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்பட்டது. நீர்த்தேக்க தொட்டி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் தற்பொழுது நீர் தொட்டியின் அடிப்பாகம் சிமெண்ட் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டியின் நான்கு தூண்களும் வலுவிழந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வலுவிழந்து பழுதடைந்த நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி அருகே அரசு பள்ளியும் இயங்கி வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் தொடர் மழையில் இந்த நீர்த்தேக்க தொட்டி நேரத்திலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி பயில வரும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள சுக்காம்பட்டி நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளித்தலை அருகே மேலசுக்காம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்கத்தொட்டி appeared first on Dinakaran.

Tags : Melesukambatti ,Kulithalai ,Karur District Kulithalai Panchayat Union ,Inungur Panchayat ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...