×

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்: பசுமை தாயகம் அமைப்பினர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை, ஜூன் 13: எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. 144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.734 கோடியே 91 லட்சம் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 60 முதல் 100 ஆண்டுகள் பழமையான 600 மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தரப்பில் பாமக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் ஆஜராகி அவசர முறையீடு செய்தார். ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

The post எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்: பசுமை தாயகம் அமைப்பினர் நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Egmore ,Green Homeland ,Chennai ,Green Homeland Organization ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...