×

கிரிங்க் வி1, ஜிடி 450 புரோ

எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யும் எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், கிரிங்க் மற்றும் ஜிடி450 என்ற இரண்டு எலக்ட்ரிக் டூவீலர்களை ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தது. தற்போது, அதிவேகம் கொண்ட இவற்றின் மேம்படுத்தப்பட்ட டூவீலர்களாக கிரிங்க் வி1 மற்றும் ஜிடி450 புரோ என்ற இரண்டு டூவீலர்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இவை வலுவான கட்டமைப்புடன் கூடிய உயர் தர சேசிஸ், அலுமினியம் அலாய் வீல்கள், மற்றும் ஸ்மார்ட் கண்ட்ரோலர்களுடன் வருவகிறது. மேலும் ஒன்றிய அரசின் புதிய விதிகளின்படி இவற்றில் ஏஐஎஸ் 156 பேஸ்-2, லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

துவக்க ஷோரூம் விலையாக ஜிடி450 புரோ சுமார் ₹89,000 எனவும், கிரிங்க் வி1 சுமார் ₹94,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. நிறுவன இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். எனிக்மா கிரிங்க் வி1ல்ஐ 36ஏஎச் 72 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கி.மீ தூரம் வரை செல்லும்.

அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதுபோல், ஜிடி 450 புரோ ஸ்கூட்டரில் 40 ஏஎச் எல்பிஎப் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் மூன்றரை மணி நேரம் ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கி.மீ வேகம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post கிரிங்க் வி1, ஜிடி 450 புரோ appeared first on Dinakaran.

Tags : Enigma Automobiles ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...