×

வரதராஜபெருமாள் கோயில் தேரை 1.5 செமீ உயரம் வரைந்து அசத்திய காஞ்சிபுரம் ஓவியர்

காஞ்சிபுரம்: உலகப்புகழ்பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி வரதராஜ பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், ஆயகலைகளுள் ஒன்றான ஓவியக்கலை உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன், உணர்வுகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. காட்சிகள் ஓவியரின் கைவண்ணத்தில் புதிய வடிவத்தையும், துல்லியமான உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஓவியரான பா.சங்கர் என்பவர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்ச நிகழ்வின்போது, கருட வாகனம், சிம்ம வாகனம், ஹம்ஸ வாகனம், சூரியபிரபை, சந்திர பிரபை, யாளிவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதி உலா வந்ததை புகைப்படங்களாக சேகரித்து, நீர் வண்ண ஓவியங்களாக மிக அழகாகவும், நுணுக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார்.குறிப்பாக, பிரமோற்சவத்தின்போது வீதி உலா சென்ற திருத்தேரை மிக சிறிய அளவில் 1.5. செமீ உயரத்தில் நீர் வண்ண ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இது பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post வரதராஜபெருமாள் கோயில் தேரை 1.5 செமீ உயரம் வரைந்து அசத்திய காஞ்சிபுரம் ஓவியர் appeared first on Dinakaran.

Tags : Varadarajaperumal ,Asathiya ,Kanchipuram ,Varadaraja Perumal Temple ,Athivaradhar Temple ,Vaikasi Promotsavam ,
× RELATED களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்