×

ஆசிய கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசி வரை இந்திய அணி வெல்லாது: சுனில் கவாஸ்கர் ஆவேசம்!!

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2-0 என வென்றுவிட்டு வருவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெரிவித்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை 209 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது.கதாயுதம்’ வடிவிலான கோப்பை மற்றும் முதல் பரிசாக ₹13.22 கோடியை தட்டிச் சென்றது. பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா ₹6.60 கோடியுடன் திருப்தி அடைந்தது. ஐசிசி உலக கோப்பை தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை, இந்திய அணி தொடர்ச்சியாக வீணடித்து வருவது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் “மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அடுத்ததாக இந்திய அணி மோதவுள்ளது; மே.இ.தீவுகள் ஒன்றும் சிறப்பான அணி இல்லை; அவர்களுடன் 2-0 என வென்றுவிட்டு வருவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை!2 ஆண்டுகளுக்கு பிறகு, இறுதிப்போட்டியில் ஒருவேளை மீண்டும் ஆஸி-யை எதிர்கொண்டால், செய்த தவறையே இந்தியா செய்யும். ரோஹித், விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள்? அத்தனை அனுபவத்திற்கு பிறகும், டி20 தொடரில் விளையாடிவிட்டு வருவதால், டி20 போட்டிக்கு ஏற்ற ஷாட்களை அடித்து அவுட்டானார்கள் என சாக்குப்போக்கு சொன்னால்,எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது! என்ன தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து, கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்; அதை செய்யத் தவறினால், ஆசிய கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசி வரை இந்திய அணி வெல்லாது,’என்று தெரிவித்துள்ளார்.

The post ஆசிய கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசி வரை இந்திய அணி வெல்லாது: சுனில் கவாஸ்கர் ஆவேசம்!! appeared first on Dinakaran.

Tags : Asian Cup ,Sunil Kavaskar ,London ,India ,West Indian Islanders ,Dinakaran ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...