×

எகிப்து நாட்டின் சுற்றுலா படகில் தீடிரென தீ விபத்து: 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் காணவில்லை

கெய்ரோ: எகிப்தின் செங்கடல் கடற்கரையில் மோட்டார் படகு தீப்பிடித்ததில் மூன்று பிரிட்டன்களைக் காணவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் செங்கடல் கடற்பகுதியில் உள்ள மார்சா ஆலம் என்ற இடத்தில் சுற்றுலா படகு சென்று கொண்டிருந்தது. அப்போது சுற்றுலா படகில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த படகில் 14 பணியாளர்கள் மற்றும் 15 பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 29 பேர் சென்றுள்ளனர். அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 14 எகிப்தியர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 3 சுற்றுலா பயணிகளை காணவில்லை என்று தெரிவித்துள்ள தீயணைப்பு துறையினர் படகின் என்ஜின் அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எரியும் சுற்றுலா படகில் இருந்து ஒருவர் குதித்து தப்பிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஞ்சியவர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. சுறா தாக்குதலில் ரஷ்யர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ஹுர்காடாவின் செங்கடல் ரிசார்ட்டில் கடற்கரைகள் மூடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post எகிப்து நாட்டின் சுற்றுலா படகில் தீடிரென தீ விபத்து: 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் காணவில்லை appeared first on Dinakaran.

Tags : thetrena fire ,egypt ,Cairo ,Britons ,Red Sea coast ,Tidrena fire ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு...