×

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி; உள்ளூர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து வழிபாடு..!!

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி உள்ளூர் மக்கள் மொட்டை அடித்து வழிபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் பயணிகள் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்ட போது உள்ளூர் மக்கள் மனிதநேயத்துடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பலர் தாங்களாகவே முன்வந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து நடந்து இன்றோடு 10 நாட்கள் ஆன நிலையில், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி, உள்ளூர் மக்கள் நூதன முறையில் சடங்கு செய்தனர். பஹானகா பகுதியில் உள்ள குளம் அருகே திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மொட்டை அடித்து வழிபட்டனர். விபத்தில் பலியானவர்களை தங்களது குடும்பத்தில் ஒருவராக கருதி இந்த சடங்கை செய்வதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி; உள்ளூர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Odisha train crash ,Bhubaneswar ,Odisha ,train ,Odisha Train ,
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்