×

₹1,774 கோடி நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சேலம், ஜூன் 12: சேலம் அடுத்த கருப்பூரில் நடந்த அரசு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட, ₹1,774 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். சேலம் அடுத்த கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன், கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சேலம் மாவட்டத்தில் ₹1,367.47 ேகாடி மதிப்பீட்டில் முடிவுற்ற 390 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். குறிப்பாக, ₹652.84 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், ₹101.55 கோடியில் சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம், ₹3.98 கோடி செலவில் சேலம் உருக்காலையில் மாவட்ட பேரிடர் நிவாரண மையம், ₹2.75 கோடியில் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டப் பணிக்கான கண்காணிப்பு அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ₹63.40 கோடியில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி உள்பட, ₹236 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடந்த விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில், 50,202 பயனாளிகளுக்கு ₹170.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தம்மம்பட்டி மரச்சிற்பத்தை கலெக்டர் கார்மேகம் நினைவு பரிசாக வழங்கினார். இதேபோல், மாநகராட்சி சார்பில் மார்டன் தியேட்டர் நினைவு சின்னத்தை, முதல்வருக்கு மேயர் ராமச்சந்திரன் வழங்கினார்.

விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்பிக்கள் பொன்.கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணை மேயர் சாரதாதேவி, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மண்டலக்குழு தலைவர்கள் கலையமுதன், அசோகன், உமாராணி, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.அண்ணாமலை, மலர்விழிராஜா, மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் காசி, மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா, சேலம் மாநகர செயலாளர் ரகுபதி, துணைச்செயலாளர்கள் வக்கீல் கணேசன், தினகரன், பகுதி செயலாளர்கள் தமிழரசன், பன்னீர்செல்வம், சாந்தமூர்த்தி, பிரகாஷ், மணமேடுமோகன், ஜெய், ஏ.எஸ்.சரவணன், ஜெகதீஸ், முருகன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, செல்வகுமார், ரமேஷ், நடராஜன், அறிவழகன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி வெண்ணிலா சேகர், வாழப்பாடி சக்ரவர்த்தி, ஆத்தூர் செழியன், அயோத்தியாபட்டணம் விஜயகுமார், ரத்தினவேல், கெங்கவல்லி சித்தார்த்தன், தலைவாசல் மணி, பெத்தநாயக்கன்பாளையம் மத்தியம் மூர்த்தி, தெற்கு தங்க மருதமுத்து, வடக்கு சிவராமன், வெங்கடேசன், ஏற்காடு ராஜா, சேலம் ஒன்றிய சேர்மன் மலர்க்கொடி ராஜா, ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் அழகாபுரம் முரளி, பாலு, கிழக்கு துணை அமைப்பாளர் குப்புசாமி, ஐடி அணி உதயகுமார், ஒன்றியக்குழு துணை தலைவர் சேகர், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மேலமலை, நரசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர், ஏத்தாப்பூர் சேர்மன் அன்பழகன், அயோத்தியாபட்டணம் பேரூராட்சி தலைவர் பாபு, துணை தலைவர் செல்வசூர்யா சேதுபதி, மல்லூர் பேரூராட்சி தலைவர் லதா அய்யனார், பேரூர் செயலாளர் சரவணன், தமிழரசன், லோகநாதன், பிரபாகரன், ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் பி.எல்.பழனிசாமி, வசந்தாமயில்வேல், தனலட்சுமி சதீஸ்குமார், மூர்த்தி, ஆர்ய வைஸ்ய முன்னேற்றப் பேரவை அரவிந்தன், டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி ஜம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹1,774 கோடி நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Salem ,Tamil Nadu ,M.K.Stalin ,Karupur ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...