×

தொடர் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்

 

முத்துப்பேட்டை,ஜூன்12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்கரை சாலை புதுரோடு பஸ் ஸ்டாப் அருகே விபத்துகளுக்கு பெயர் போன ஒரு இடமாகும். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், துளைசியாப்பட்டினம் பகுதியை ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து உறவினர்கள் வேனில் ஊர் திரும்பியபோது,புதுரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே விபத்து ஏற்பட்டு சுமார் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தால் இப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் அன்றைய நாள் முதல் இன்று வரை தினமும் இந்த பகுதியில் விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. தினமும் நடக்கும் விபத்துக்களும் குறையவில்லை. இங்கு வந்து தான் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் போன்ற பகுதிக்கும், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற பகுதிக்கு செல்லவும் மக்கள் பஸ் ஏறி இறங்கி வருகின்றனர். எனவே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலை புதுரோடு பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தொடர் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Muthuppetta ,Thiruvarur district ,Upur East Coast Road Bus Stop ,Uthuppur East Coast Road ,Muttupatti ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு