×

பைக் மோதி தொழிலாளி பலி

 

ஈரோடு,ஜூன்12:ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அரியா கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(55). கூலி தொழிலாளி. இவர், கடந்த 8ம் தேதி இரவு ஊமாரெட்டியூர்-குருவரெட்டியூர் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த பைக் எதிர்பாரதவிதமாக முத்துசாமி மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த முத்துசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் முத்துசாமி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Muthuswamy ,Nerinchipet Aria Kauntanur ,Erode district ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...