×

தொண்டமாந்துறை-விஜயபுரம் வரை சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

 

பெரம்பலூர், ஜூன் 10: தொண்டமாந்துறையிலிருந்து விஜயபுரம் வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பங்கேற்றார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, தொண்டமாந்துறையில் இருந்து விஜயபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அந்த சாலையை சீரமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது.

விழாவிற்கு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் தலைமை வகித்து, சீரமைப்பு பணியை துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும் மாவட்ட திமுக துணை செயலாளருமான தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) நல்ல தம்பி, (கிழக்கு) ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொண்டமாந்துறை-விஜயபுரம் வரை சாலை சீரமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thondamanthurai ,Vijayapuram ,Perambalur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...